• Jul 25 2025

தேவையில்லாத ஆணி பிடுங்காதீங்க... கோபத்தில் சித்தார்த்... நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி வருவது வழமையான ஒன்று.


இந்நிலையில் இன்றைய தினம் 'உலக தற்கொலை தடுப்பு தினம்' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வளாகத்தில் வாக்கத்தான் ஓட்டம் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

அதாவது சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் இந்த வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில் தற்கொலைகளை தடுக்கும் வகையில் பொதுமக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் வந்திருந்தனர். 


அந்தவகையில் குறித்த இந்த நிகழ்வில் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சித்தார்த்திடம் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளமை குறித்துக் கேட்கப்பட்டது.

அப்போது கோபமடைந்த சித்தார்த் "நம்ம எல்லாருமே இந்தியால, சென்னையில கூடியிருக்கோம். இப்போ நடக்குற வாக்கத்தான் பற்றி பேசுவோம். இங்க வந்து எந்த பெயர், யார் வச்சாங்கங்கிறதெல்லாம் தேவையில்லாத ஆணி. எதுக்காக வந்திருக்கோமோ அதுபத்தி மட்டும் பேசுவோம்" என அங்கு நின்ற செய்தியாளர்களிடம் கத்தி இருக்கின்றார்.

Advertisement

Advertisement