• Jul 25 2025

டிவில பார்த்ததை எதையும் மனசில வச்சுக்காதீங்க- விக்ரமன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்ட அசீம்- அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தனர். இது ஹவுஸ்மேட்ஸை மாத்திரம் அல்லாது பார்வையாளர்களையும் குஷிப்படுத்தியது. வீட்டிற்குகு வரும் போட்டியாளர்கள்  தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதனிடையே, விக்ரமனின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருந்தனர். அப்போது அசீமிடம் பேசும் விக்ரமனின் தந்தை, "அசீம் எப்படி இருக்கீங்க?" என கேட்கிறார். தொடர்ந்து பேசும் அசீம், "நல்லா இருக்கேன் பா. டிவில பாக்குறது எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க. அது எல்லாம் விவாதம் தான்" என கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமனின் தந்தை, "அய்யய்யோ அதுல மனசுல வெச்சுக்க என்ன இருக்கு" என தெரிவிக்கிறார்.


இதே போல மற்றொரு இடத்தில், சில வார்த்தைகளை பேசியதாகவும் அவை கோபத்தால் உருவானதாகவும் விக்ரமனின் பெற்றோர்களிடம் அசீம் கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமனின் தாயார், "எல்லாரும் எங்க புள்ளைங்க தான், அது எல்லாம் நாங்க கோவப்பட மாட்டோம்" என சிரித்த முகத்துடன் பதில் சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோரிடையே நிறைய முறை வாக்குவாதங்கள் அரங்கேறி உள்ளது.

அப்படி ஒரு சூழலில், விக்ரமனின் பெற்றோர்களிடம் அசீம் தெரிவித்த விஷயமும், அதற்கு அவர்கள் சொன்ன பதிலும் பெரிய அளவில் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.






Advertisement

Advertisement