• Jul 23 2025

யாரோட பாஸ்ட் பற்றியும் பேசக்கூடாது- கண்ணீர் வடித்த நடிகை ஹன்சிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் இவர் நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இது தவிர கடந்த ஆண்டு டிசம்பரில் இவர் தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கத்தூரியா எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் 

 ஹன்சிகாவுக்கு ஒரு பாஸ்ட் இருந்ததை போலவே சோஹேல் கத்தூரியாவும் 6 ஆண்டுகள் முன்னதாக ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்திருந்த நிலையில், விவாகரத்து நடந்தது. அதன் பின்னர் தற்போது நடிகை ஹன்சிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், அதிகமான ட்ரோல்கள் கிளம்பின.


மேலும் இவர்களுக்கு ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய ஹன்சிகா விரைவில் திருமண வீடியோவையே ஓடிடியில் வெளியிட உள்ளார்.


ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியாவின் ஜோடியின் திருமண வீடியோவுக்கு லவ் ஷாதி டிராமா என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், டீசரில் ஒரே அழுகை டிராமாவை போட்டு த்ரில்லிங்கான திருமண வீடியோவை ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ஹன்சிகா.


மேலும், அந்த டீசரில் குறிப்பாக யாருடைய பாஸ்ட் பற்றியும் தப்பா பேசாதீங்க என நடிகை ஹன்சிகா பேசிவிட்டு கதறி அழும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சோஹேல் கத்தூரியாவின் முதல் மனைவி பற்றிய ட்ரோல்களுக்கு இந்த திருமண வீடியோ மூலம் ஹன்சிகா பதிலடி கொடுக்க காத்திருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement