• Jul 24 2025

அந்த நாளில் மனைவியுடன் இருக்க விருப்பமில்லை... நீயா நானா ஷோவில் உண்மையை உடைத்த நபர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய விவாத நிகழ்ச்சியான 'நீயா நானா' ஷோ ஆனது கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை  பல விதத்திலும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஷோவை தொகுப்பாளர் கோபிநாத் நடத்தி வருகிறார். 


இந்நிலையில் இந்த வாரமும் சுவாரஸ்யமான தலைப்பின் கீழ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் கிழமை நாட்களை விட வார இறுதி நாட்களில் என்னால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது என நீயா நானாவில் இளைஞர் ஒருவர் கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது "பொதுவாக குடும்ப வாழ்க்கை என்று பார்க்கும் போது அதில் கணவன் - மனைவி என இருவருக்கும் பங்கு இருக்கிறது. இதனை தவறும் பட்சத்தில் நிறைய குளறுப்படிகள் ஏற்பட்டு அது இறுதியாக பாரிய சண்டையாக போய் முடிகிறது" என்றார்.


அந்த வகையில் திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மனைவி குழந்தைகளுடன் விடுமுறை நாட்களை கடப்பது மிகவும் குறைவு என நீயா நானாவில் உண்மையை உடைத்துள்ளார் இளைஞரொருவர்.

இந்த ஷோவில் திருமணத்திற்கு முன்னர் கணவர்மார்கள் தன்னுடைய மனைவி அல்லது காதலியை இம்பரஸ் செய்வதற்காக அடிகடி வெளியில் அழைத்து செல்வார்கள். ஆனால் திருமணம் ஆன பின்னர் விடுமுறை நாட்களில் வீட்டில் இருப்பது கூட இல்லை முறைப்பாடு ஒன்று முன்வைக்கபட்டுள்ளது.


இதனை தொடர்ந்து தான் அங்குள்ள கணவரொருவர் "நான் விடுமுறை ஏன் வருகிறது என யோசித்துள்ளேன்" என மனைவி முன் ஓபனாக ஒப்பு கொண்டுள்ளார். இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement