• Jul 25 2025

“உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... ” ? மேடையில் ஃபயர் ஆன சிம்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல வெற்றி படங்களை கொடுத்த சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில்  'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் நேற்றைய தினம் மாலை 6மணி முதல் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

அந்த விழாவின் போது சில விஷயங்களை சிம்பு கூறியிருந்தார்.அதில் தெரிவித்ததாவது...


இந்த படத்தில் நடிக்க நான் ஒத்துக்கொண்டதற்கு காரணம் கவுதம் கார்த்திக் தான். ஒரு சின்ன படமாக இருந்தாலும் சரி, பெரிய படமாக இருந்தாலும் சரி, யார் படமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்கனா உடனே அவங்கள கூப்பிட்டு பாராட்டிவிடுவேன். அது ஏன்னு என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். ஏன்னா, இங்க தட்டிவிடுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க, தட்டி கொடுக்குறதுக்கு யாருமே இல்லை. எனக்கு தட்டி கொடுக்குறதுக்கு என் ரசிகர்கள் மட்டும் தான் இருந்திருக்காங்க.

இந்த படம் எனக்கு வெற்றி கிடைக்குதோ இல்லையோ, கவுதமிற்கு இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். இதற்காக நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். முதலில் இந்த படத்தில் நடிச்சப்போ குண்டாக இருந்தேன். அந்த கேரக்டருக்கும் அது செட் ஆகிவிட்டது. பின்னர் இது கிடப்பில் போடப்பட்ட சமயத்தில் நான் ஒல்லியாகி மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களில் நடிச்சு முடித்த பிறகு, மீண்டும் பத்து தல படத்தில் நடிக்கனுமா என்கிற மனநிலையில் தான் இருந்தேன். பின்னர் கவுதமிற்கு வாக்கு கொடுத்த காரணத்தினால் நடிக்க முடிவு செய்தேன்.

அப்போ இயக்குனர் ஒபிலி என்னிடம் வந்து சார் இந்த கேரக்டருக்காக நீங்க குண்டாகனும்னு சொன்னார். ஏன்யா உனக்கு மனசாட்சியே இல்லையா, ஒவ்வொரு கிலோவும் குறைக்க நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்னு சொன்னேன். அப்புறம் அந்த ஒல்லியான உடம்புடன் போட்டோஷூட் பண்ணி பார்த்தப்போ ஸ்கூல் பையன் மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் தான் உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்து. இப்படத்திற்காக வெயிட் போட்டேன்.

Advertisement

Advertisement