• Jul 26 2025

எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியான ட்விஸ்ட்..! இனி கதையே மாஸ் தான்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோவில் பரபரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான்  எதிர்நீச்சல். இந்த தொடருக்கு அநேகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

குறித்த சீரியல், பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற பல விஷயங்கள் தொடர்பில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் விதமாக காணப்படுகிறது. இதன் காரணமாகவே அதற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

தற்போது குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி மாஸ் என்ட்ரி கொடுத்து நடித்து வந்திருக்கிறார்.

இவருக்கான வரவேற்பு எல்லாம் பலமாகத்தான் இருந்தது. ஆனால் போகப் போக ஒவ்வொரு நாளும் புது குணசேகரனின் நடவடிக்கைகள், பேச்சு, அடாவடித்தனமான வன்மம் இது எல்லாம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து எரிச்சல் அடைய வைத்து வருகிறது. 

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இனி குணசேகரன் கதாபாத்திரம்  குறிப்பிட்ட நாளைக்கு வராது என்று நினைத்தால் இன்று வெளியான  புரொமோவில் அதிரடியாக வந்துள்ளார்.இதை  பார்த்தால்  எதிர்நீச்சல்தொடரில்  மீண்டும் மாஸ் இருக்கிறது என தெரிகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த கதாபாத்திரம் வச்சு செய்யும் போலயே என  ரசிகர்கள் விறுவிறுப்பாக  கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement