• Jul 26 2025

டெல்லியில் நிலநடுக்கமா? ...குஷ்பு பகிர்ந்த வைரல் புகைப்படம்..! ஷாக்கான ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். 

தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில் டெல்லியில் நிலநடுக்கத்தை, தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், “டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருக்களில் உள்ளோம். இங்கு என்சிஆர் முழுவதும் பலத்த நடுக்கம். சுனாமிக்குப் பிறகு இந்த நிலநடுக்க அனுபவம். இந்த நடுக்கம் சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. வீட்டில் உள்ள மின்விசிறிகள் மற்றும் சரவிளக்குகள் அப்படியே நகர, சோஃபாக்கள் அலறுவது போல் இருந்தது,  கீழே ஒரு அமைதியான ஜெனரேட்டர் போன்ற சத்தம் எங்களை வேகமாக வெளியேறச் சொல்ல, நாங்கள் வீட்டுக்கு வெளியில் வந்துவிட்டோம். அனைவரும் வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக இருங்கள் மற்றும் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்று நடிகை குஷ்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்.




Advertisement

Advertisement