• Jul 24 2025

குடும்பத்திற்கு தெரியாமல் இளங்கோ செய்த காரியம்- செந்திலின் காலேஜ் படிப்புக்கு வந்த சிக்கல்.. அதிர்ச்சியில் அமுதா

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

அமுதாவும் அன்னமும் செந்திலுக்கு பீஸ் கட்ட கவுண்டருக்கு வர, ஏற்கனவே செந்திலுக்கு பீஸ் கட்டியாச்சு என கேஷியர் சொல்கிறார்‌. அமுதா ஒன்றும் புரியாமல் யார் பணம் கட்டியது என கேட்க, இப்ப தாம்மா கட்டிட்டு போறாரு என கை காட்ட அமுதா அங்கு பார்க்க இளங்கோ சென்று கொண்டிருக்கிறான்.உடனே அமுதா இளங்கோவிடம் நீ எதுக்குன்னே பீஸ் கட்டுன என கேட்க, எனக்கு என் தங்கச்சி திரும்ப வீட்டுக்குள்ள வரனும் என சொல்ல அமுதா நெகிழ்கிறாள்.


அடுத்து செந்தில் காலேஜில் படித்துக் கொண்டிருக்க வாத்தியார் ஒருவர் வந்து உன்னை யாருடா காலேஜ்ல சேர்த்தது? உனக்கு எந்த தகுதியும் இல்லை வெளியே போ என சொல்ல HOD வருகிறார். என் ஸ்டூடண்டை போகச் சொல்றதுக்கு நீ யாருய்யா என சண்டையிடுகிறார்.வாத்தியார் HOD யிடம் 5 வருஷத்துக்கு முன்னாலயே இவனை காலேஜ்ல இருந்து வெளில அனுப்பியாச்சு, இவனே ஏதோ கோல்மால் நீங்க காலேஜூக்குள்ள சேர்த்திருக்கீங்க என சொல்கிறார். 

HOD அவரிடம் நான் போலீஸ் வேலையை விட்டு வாத்தியாரா வந்திருக்கேன், எனக்கு தெரியும் சட்டம் என்னன்னு என சொல்கிறார்.பிறகு பிரின்சிபால் முன்னிலையில் வாத்தியார் செந்தில் எக்ஸாமில் பாஸ் ஆகவே இல்லை, HOD ஏதோ கோல்மால் பண்ணி அவனை மீண்டும் காலேஜ்ல சேர்த்திருக்காரு.. HOD பிரின்சிபலிடம் செந்திலை தான் தனியாக இண்டர்வியூ செய்ததாகவும் அதில் அவன் பாஸ் ஆகி விட்டதாகவும் சொல்கிறார்.


வாத்தியார் அவனை காலேஜை விட்டு வெளிய அனுப்புங்க சார் என பிரின்சிபாலிடம் சொல்ல, அமுதா, அன்னம், செந்தில் என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை  ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement