• Jul 25 2025

எங்க அண்ணனே எனக்கு சூனியம் வைச்சான்- மேனேஜர் சொன்னப்போ நடுங்கிச்சு- நடிகர் பொன்னம்பலம் கூறிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான வில்லனாக வலம் வந்தவர் தான் பொன்னம்பலம். இவர் கபாலி என்ற பெயரின் மூலமே மக்கள் மத்தியில் பிரபல்யமானவர். தமிழில் விஜய் ,அஜித் ,சிம்பு, தனுஷ், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களின் திரைப்படங்களிலும் முரட்டுத் தனமாக நடித்திருக்கின்றார்.

இது தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டவர். மேலும் அண்மையில் உடல் நிலை சரியில்லாமல் போனதோடு சத்திரசிகிச்சையும் மேற் கொண்டார். தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.


அதில் அவர் கூறியதாவது ஒரு நாள் நித்திரை வரல என்று பால்கணியில் நின்றிட்டு இருந்தேன்.அப்போ எங்க வீட்டு வாசலில் என்னோட மேனேஜரும் அண்ணாவும் சேர்ந்து கிடங்கு வெட்டி என்னோட லுங்கி கால் ஏதேதோ காய் தகடு எல்லாம் போட்டு ஏதோ செய்திட்டு இருந்தாங்க. 


அப்போ மறுநாள் காலையில் மேனேஜர் கிட்ட விசாரிச்ச போது தான் அவன் சொன்னான் எங்க அண்ணன் தான் சூனியம் வைக்க சொன்னான் என்று கூறியுள்ளார்.அதுக்கு பிறகு தான் அண்ணன் பற்றி தெரிய வந்திச்சு என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement