• Jul 25 2025

பொங்கி எழுந்த ADK-பிக்பாஸ் வீட்டுக்குள் வெடிக்கும் சண்டை-வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6வது சீசன் ஒளிபரப்பாகி புதுவித டாஸ் பிக்பாஸ் குழுவால் போட்டியாளருக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பிக்பாஸ் வீடானது 2ஸ்வீட்ஸ் தொழிற்சாலையாக மாறுகின்றது. அதில் அமுதவாணன் தலைமையிலான கடையின் பெயர் "கண்ணா லட்டுத் தின்ன ஆசையா". அதேபோன்று அசீம் தலைமையிலான கடையின் பெயர் "தேனடை". 

இந்த தொழிற்சாலை ஆனது 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அதில் பலகாரங்களை செய்து ஆர்டரை அனுப்ப வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது பொருட்கள், மற்றும் கல்லாப்பெட்டியை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனவும் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் ஒவ்வொரு டீமின் ஸ்வீடை பார்த்து கொண்டு இருக்கையில் பொங்கி எழுந்த ADK மற்றும் அசீம் இவர்கள் இருவரையும் பார்த்து கேள்வி கேட்கின்றனர்.அதாவது எங்களுடைய டீமிக்கு மட்டும் அத்தனை கேள்வி கேட்டீங்க ஆனால் அவங்களுக்கு கேட்கலை என கேட்டதும் அதற்கு பதிலளிக்கின்றார் ஆயிஷா.அதன் தொடர்சியாக அசீமும் பல கேள்விகளை கேட்க ராம் அதற்கு பதிலளிக்க வர ஆயிஷா அவரின் கையை தட்டிவிட்டு சாரி என கூறி முடிக்கின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement