• Jul 25 2025

பாரதியுடன் கண்ணம்மா சேர்ந்த பின்னரும் இந்த டுவிஸ்ட் தேவையா?- மோசமாக கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்.தாமரை சொன்ன வார்த்தைகளால் யோசித்துப் பார்த்த கண்ணம்மா பாரதியுடன் சேர்ந்து வாழ்வதுதான் நல்லது என முடிவெடுத்து பாரதியை ஏற்றுக்கொண்டார்.

இதனால் நேற்றுடன் சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.ஆனால் கடைசியில் தொடரும் என போட்டு ட்விஸ்ட் வைத்துள்ளனர். இதனால் இன்னும் என்னடா பண்ண காத்துகிட்டு இருக்கீங்க என்ன ரசிகர்கள் வெறுப்புடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது கிளைமாக்ஸ் இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கிறது. டைவர்ஸ் வாங்கி பிரிந்துவிட பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைப்பது தான் இந்த வாரம் வர இருக்கிறது.


திருமணத்திற்கு எல்லோரும் உடை எடுக்க செல்ல, முகூர்த்த புடவையை நானே நெய்து தருவதாக சொல்லி அந்த வேலையில் இறங்குகிறார். பாரதி டாக்டர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையையும் செய்வார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.'போன வாரமே முடித்திருக்கலாம்' எனவும் பலரும் இயக்குநரை கமெண்டில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement