• Jul 26 2025

37 வயதிலும் கண் பாஷை பேசும் பாவனா... அந்த சிரிப்பு, பார்வை எல்லாமே அப்படியே தான் இருக்கு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் நம்ம இளைஞர்கள் பலரதும் கனவுக் கன்னி என்றால் அது நம்ம பாவனா தான். இவரின் நடிப்பினையும் தாண்டி சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். இவர் குறிப்பாக தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். 


அந்தவகையில் இவர் தமிழ்த் திரையுலகில் 'சித்திரம் பேசுதடி' என்ற திரைப்படத்தின் மூலமாகவே அறிமுகமானவர். பின்னர் 'வெயில்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாரட்டுக்கள் கிடைத்தது. 


அதனைத் தொடர்ந்து தமிழில் 'தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல்' உட்படப் பல திரைப்படங்களில்  அசத்தியிருக்கின்றார்.

இவர் நடித்த பல வெற்றிப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. அத்தோடு இவர் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறாக படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வந்த இவர் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 22 இல் கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.


படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்ற இவர் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்தவகையில் தற்போதும் கறுப்பு நிற உடையணிந்து கண் பாஷை பேசும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.


அதில் இவர் செம க்யூட்டாக இருக்கின்றார். அதனைப் பார்த்த நம்ம ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? அப்புகைப்படங்களை அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement