• Jul 26 2025

சீரியலில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில நீங்க ஹீரோ சேர்- அதிகாலையிலேயே கோபி செய்த காரியம்- பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது.இந்த தொடரில் குறைவான கேரக்டர்களுடன் நிறைவான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார் இயக்குநர்.

 இந்தத் தொடரில் தற்போது தன்னுடைய கணவன் கோபியிடம் போட்ட சவாலுக்காக அதிகமான ரிஸ்க் எடுத்து வருகிறார் பாக்கியா. ஆனால் அங்கேயும் கோபியின் அராஜகம் அவரை பின்தொடர்கிறது. பாக்கியா பழனிச்சாமியுடன் பழகுவது கோபிக்கு கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.


பாக்கியாவையும் பழனிச்சாமியையும் எப்படியாவது பிரித்ததே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். இதருந்தாலும் பாக்கியா இதெல்லாம் பற்றி கவலைப்படாது தன்னுடைய வேலையை மட்டும் பார்தது வருகின்றார்.


இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் கோபி என்னும் கதாக்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சதீஷ். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை கடற்கரை ஓரம் நிற்கும் நாய்களுக்கு பிஸ்கட் போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது கமெண்டுகளை போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement