• Jul 25 2025

அப்பா பொண்ணுமாதிரி பழகினாலும், அது எல்லாம் கேமுக்கு வெளியே தான்- ஷிவாங்கி பற்றிய சர்ச்சையால் டென்ஷன் ஆன வெங்கடேஷ் பட்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி சீசன் 4ல் நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கோமாளிகளாக முந்தைய சீசன்களில் இருந்த புகழ், குரேசி, சுனிதா, மணிமேகலை, தங்கதுரை ஆகியோர் உடன் புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிஷ சிவா, ஓட்டேரி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டியாளர்களாக கடந்த 3 சீசனில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த முறை குக்காக மாறியுள்ளார். இவருடன் நடிகை சிருஷ்டி டாங்கே, பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியா என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.


இதுவரை கிஷோர், ராஜா ஐயப்பா, விஜே விஷால், ஷெரின், காளையன் என 5 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.இந்த வாரம் நடைபெற்ற இம்யூனிட்டி ரவுண்ட்டில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் நேரடி பைனல் போட்டியாளராக சிவாங்கி தேர்வாகியுள்ளார்.

சிவாங்கி பைனலுக்கு தேர்வாகி உள்ளதற்கு இணையத்தில் பலவிதமான நெகடிவ் கருத்து பரவி வருகிறது. நல்ல சமைக்க தெரிந்தவர்கள் பலர் இருக்கும் போது, சிவாங்கிக்கு மட்டும் சொம்பு தூக்குறாங்க என்ற கருத்து பரவி வருகிறது. இணையத்தில் பரவும் இந்த கருத்தால் டென்ஷனான செஃப் வெங்கடேஷ் பட், நானும் சிவாங்கியும் அப்பா பொண்ணுமாதிரி பழகினாலும், அது எல்லாம் கேமுக்கு வெளியில் தான்.


குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை யாருக்கும் எந்தவிதமான சலுகை காட்டுவது இல்லை. அவர்கள் சமைக்கும் உணவு நன்றாக இருந்தால் மட்டுமே பைனலுக்கு போவாங்க, அவங்க மட்டும்தான் வெற்றியாளராக இருப்பார்கள் என்று செஃப் வெங்கடேஷ் பட் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement