• Jul 26 2025

50 வயதாகியும் திருமணமாகவில்லை.. சிறு வயதில் தந்தையும் பிரிந்து விட்டார்... தபுவின் வாழ்க்கையில் இத்தனை சோகமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பிரபல நடிகையான தபு தமிழில் 'காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டே, சினேகிதியே' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருப்பினும் நடித்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 


இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தபு நடித்துள்ளார். இவருக்கு 50 வயதான போதும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.


மேலும் தபு குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயும்-தந்தையும் கருத்து வேறுபாடுகளின் காரணமாகப் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கை குறித்து தபு சமீபத்தில் அளித்துள்ள அளித்துள்ள பேட்டியில் "பள்ளியில் படித்தபோது பாத்திமா என்பதுதான் எனது குடும்ப பெயர். என் தந்தையின் குடும்ப பெயரை உபயோகிப்பது முக்கியம் என நான் எந்த ஒரு காலக்கட்டத்திலும் ஒருபோதும் நினைக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.


மேலும் "நான் எடுத்துக்கொண்டது தபு என்கிற எனது சினிமா பெயரைத்தான். எனக்கு என் தந்தை சம்பந்தப்பட்ட நினைவுகள் எதுவும் கொஞ்சம் கூட இல்லை. அவர் எங்களை நான் சிறுமியாக இருந்த போதே தனியாக விட்டு பிரிந்து சென்று விட்டார். என் சகோதரி பரா நாஜ் மட்டும் அடிக்கடி சென்று அவரை சந்தித்து வருவார். 


ஆனால் நான் எப்போதும் அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்பியது இல்லை. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூட எனக்கு இன்றுவரை வந்தது இல்லை. இப்போது நான் எனது வாழ்க்கையில் மிகவும் நல்லபடியாக செட்டில் ஆகி இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' எனவும் கூறி இருக்கின்றார்.

இவ்வாறாக 50 வயதிலும் திருமணமாகாமல் இருக்கும் நடிகை தபு தனது சொந்த வாழ்க்கை குறித்து மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.

Advertisement

Advertisement