• Jul 23 2025

ஒவ்வொரு நாளும் அப்பா உங்களை அதிகமாக நேசிக்கிறேன்- தந்தையை பார்த்து உருகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அப்பா புதுச்சேரிக்கு வந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கூறியிருப்பதாவது உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனால் ஒரு நாள் உங்களை வைத்து படம் இயக்குவேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் அப்பா உங்களை அதிகமாக நேசிக்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.


ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் கூறியிருப்பதாவது, லால் சலாம் வெற்றி அடைய வாழ்த்துக்கள். தலைவரை மொய்தீன் பாயாக பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம். தரமான சம்பவம் இருக்கு போன்று. உங்கள் போஸ்ட்டை பார்த்து ஃபீல் செய்துவிட்டோம். தலைவருக்கு மகளாக பிறக்க கொடுத்து வைத்திருக்கிறீர்கள். தலைவர் நன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஐஸ்வர்யாவின் கம்பேக் படமான இதில் ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். பல காலம் கழித்து அவர் தமிழ் படத்தில் நடிக்கிறார். மேலும் ரஜினியுடன் சேர்ந்து ஜீவிதா நடிப்பது இதுவே முதல் முறையாகும். ரஜினிக்கு கௌரவத் தோற்றம் தான் என்றாலும் சுமார் ஒரு மணிநேரம் அவரை படத்தில் பார்க்கலாமாம். இரண்டு சண்டை காட்சிகளில் வேறு மாஸ் கட்டுகிறாராம்  என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement