• Jul 24 2025

எல்லோரும் சக மனிதர்கள் தான் இனிமேல் இப்படி சொல்லாதீங்க- கடும் கோபத்தில் விஜய் ஆண்டனி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது நடிகராக வளர்ந்து நிற்கும் பிரபல்யம் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்பொழுது பிச்சைக்காரன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக வட இந்தியாவில் இருந்து அதிகம் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவர்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதால் தமிழக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கி விவசாய வேலை வரை அனைத்திலும் அவர்கள் இருக்கின்றனர்.


இது பற்றி சமூக வலைத்தளங்களில் அவர்களை வடக்கன்ஸ் என சொல்லி விமர்சிக்கின்றனர். அவர்களை ட்ரோல் செய்து கோபி சுதாகர் யூடியூபில் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரல் ஆனது.இந்நிலையில் இந்த விஷயம் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட் செய்து இருக்கிறார்.


"வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்" என ட்விட் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement