• Jul 26 2025

எல்லாருமே பண்ணுறாங்க நான் மட்டும் பண்ணல- பதில் பேசிய திவ்யா கள்ளச்சியை வெளுத்து வாங்கிய ஷகீலா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீப காலமாகவே சோசியல் மீடியாவை தவறான முறையில் பலபேர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் யூடியூப்பில் பிரபலமாகி அதை தவறாக பயன்படுத்தி வந்த பெண் ஒருவர் தான் திவ்யா கள்ளச்சி.தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் டிக் டாக் செயலி இந்தியாவில் இருந்தபோது அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

பின் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட உடன் யூடியூப் சேனல் ஒன்று தனியாக தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளை கிளப்பியது. பல முறை கைது செய்யப்பட்டு விடுதலையானார்.இருந்தாலும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார்.


இந்த நிலையில் நடிகை ஷகீலா அவர்கள் திவ்யாவை பேட்டியெடுத்துள்ளார். அதில் திவ்யா பல்வேறு விடயங்களை கூறியிருக்கின்றார். அதாவது நான் கன்டென்டக்காகவும் பணத்திற்காகவும் தான் இப்படியெல்லாம் செய்திட்டு இருக்கிறேன். அண்மையில் எனகக்கு கல்யாணம் நடந்த மாதிரி வீடியோ போட்டேன். அதெல்லாம் பொய் எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல என்று தெரிவித்தார்.

மேலும் படங்களில் கல்யாணம் பண்ற மாதிரி தான் பேமஸ் ஆகிறதுக்காக இப்பிடிப் பண்ணினோம். அதில எங்களுக்கு நிறையப் பணம் கிடைச்சிச்சு, என்னோட சேர்ந்து நடிக்கிறவங்க எல்லாம் பேமஸ் ஆகிறாங்க என்பதால் தான் இப்படிப் பண்ணிட்டு இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.


அப்போது கோபமடைந்த ஷகீலா சினிமால நீ கை காட்டிறவங்க எல்லாம் பேமஸ் ஆகிடுவாங்களா?. என்ன மனசில நினைச்சிட்டு இருக்கிற குடிக்கிற குடிச்சிட்டு திருநங்கைகளை தப்பா பேசுற எப்படி அவங்க உன்னை சும்மா விட்டாங்க, உன்னை கடவுள் படைக்கும் போது குழம்பிப் போய் இருந்தாரு போல காசுக்காக ஏமாத்துவியா.யாரெல்லாம் ஏமா்திறாங்களோ அவங்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் அது பற்றி நீ பேசாத என திவ்யாவைத் திட்டி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement