• Jul 25 2025

அவர் சொன்னது எல்லாமே தப்பு -இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் மீது புகார் கொடுத்த பிரபல நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வல் வருபவர் தான் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் மன்மதன் அம்பு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.

தொடர்ந்து தமிழில் வெடி ,புலி ,சச்சின் வில்லு எனப் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்திருக்கின்றார்.தற்பொழும் பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.


அவ்வப்போது தனி இசை ஆல்பங்களை வெளியிடும் அவர், சமீபத்தில் 'ஓ பேபி' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தெலுங்கில் இது 'ஓ பாரி' என்ற பெயரில் வெளியானது. இப்பாடலை ரகீப் ஆலம் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி போலீசில் புகார் அளித்துள்ளார்.

 பாடலில் 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற புனித வாசகம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதனால் இப்பாடலை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement