• Jul 26 2025

எல்லாம் பொய்யா: விஜய் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பும் சமந்தா...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வரும் சமந்தாவின் உடல்நிலை மோசமாக எல்லாம் இல்லை. அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார் சமந்தா.இவ்வாறுஇருக்கையில் அவரின் உடல்நலம் மேலும் மோசமடைந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. அத்தோடு  சமந்தாவால் சுத்தமாக நடக்க முடியவில்லை என்றெல்லாம் பேச்சு கிளம்பியது. ஆனால் அது எல்லாம் பொய். சமந்தா நலமாக இருக்கிறார் என அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனினும் இதையடுத்து வேலைக்கு கிளம்புகிறார் சமந்தா.


ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடித்து வந்தார் சமந்தா.அத்தோடு காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தபோது நள்ளிரவில் ஷூட்டிங் என்று கூறி சமந்தாவின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. ரொமான்டிக் காமெடி படமான குஷியை டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்காவுக்கு கிளம்பியதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அத்தோடு இன்னும் நிறைய காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளது. அதனால் குஷி படத்தை 2023ம் ஆண்டு கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளார்கள்.

அத்தோடு ஓய்வில் இருக்கும் சமந்தா டிசம்பர் மாதம் குஷி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடக்க உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. குஷி படத்தின் 40 சதவீத காட்சிகளை படமாக்க வேண்டியிருக்கிறது என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். மேலும் குஷி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடித்தபோதே தனக்கு மயோசிடிஸ் இருப்பது சமந்தாவுக்கு தெரியும். ஆனால் அதை படக்குழுவிடம் சொல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.


குஷி படத்தில் நடித்து வந்தபோது வேறு வழியில்லாமல் சிகிச்சைக்காக உடனே அமெரிக்கா கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அத்தோடு ஷிவா நிர்வாணா இயக்கத்தில் முன்னதாக மஜிலி படத்தில் நடித்தார் சமந்தா. சூப்பர் ஹிட்டான அந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் குஷி படத்தை தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். குஷியில் ஜெயராம், முரளி சர்மா, லட்சுமி, ரோஹினி, அலி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement