• Jul 23 2025

இமானின் மனைவி சொல்வதெல்லாம் உண்மை கிடையாது- பிரபல நடிகை சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வலம் வந்த முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார், அதில் சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம் என்றார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதாவது சிவகார்த்திகேயன் தான் டி. இமானுக்கும் மனைவிக்கும் இடையில் விவாகரத்தை ஏற்படுத்தினார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.


அதனை தொடர்ந்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா அளித்த பேட்டியில் 'சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன். இமான் எனக்கு இதுவரை எந்த ஜீவனாம்சமும் தரவில்லை. ஏற்கனவே ஒரு பெண்னைபார்த்து வைத்துவிட்டது தான் எனக்கு விவாகரத்து கொடுத்தார்' என விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை குட்டி பத்மினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மோனிகா சொல்வது எல்லாம் பொய் என கூறி இருக்கிறார்.தற்போது வரை இமான் ஜீவனாம்சம் கொடுத்து கொண்டிருக்கிறார். குழந்தைகளை அவர் தான் படிக்க வைக்கிறார். இமான் தற்போது திருமணம் செய்துகொண்டிருக்கும் பெண்ணை விவாகரத்து பின் நாங்கள் தான் அறிமுகம் செய்து வைத்தோம்.


விவாகரத்து முன்பே அவரை சந்தித்தார் என மோனிகா சொல்வது எல்லாம் பொய் என குட்டி பத்மினி கூறி இருக்கிறார். இதனால் மீண்டும் சிவகார்த்திகேயனின் விஷயம் சூடு பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement