• Jul 26 2025

தாலியை வாங்க மறுத்த எழில்... அதிர்ச்சியில் கயல்... கடைசியில் கல்யாணம் யாருடன்..? அதிரடித் திருப்பத்துடன் வெளிவந்த ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலின் கதைப்படி தற்போது ஆர்த்திக்கு, எழிலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.


இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கௌதம் "கயலுக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும்" என சிவசங்கரியிடம் கூறுகின்றார். மறுபுறம் ஆர்த்தியின் பெற்றோர் ஆர்த்தியின் கழுத்தில் தாலி ஏறும் போது அது தன் கழுத்தில் ஏறவில்லையே என நினைத்து மனதிற்குள் கயல் அழணும் என்று சொல்லித் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.


மணமேடையில் எழில் அமர்ந்திருக்கின்றார். அவரிடம் தாலியை ஆர்த்தி கழுத்தில் கட்டுமாறு கூறிக் கொடுக்கின்றனர். ஆனால் தாலியை வாங்காது சிறிது நேரம் யோசிக்கின்றார். இறுதியில் எழில் யார் கழுத்தில் தாலி கட்டினார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement