• Sep 13 2025

ஆர்த்தியுடன் நெருக்கமாக நிற்கும் எழில்... கண்ணீர் வடிக்கும் கயல்... இறுதியில் திருமணம் யாருடன்..? பரபரப்பான திருப்பங்களுடன் 'கயல்'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலானது தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் எழில் கழுத்தில் மாலையுடன் நிச்சயதார்த்த மேடையில் ஆர்த்தியுடன் கை கோர்த்தவாறு நெருக்கமாக நிற்கின்றார். இதனைப் பார்த்த கயல் கண் கலங்கி கண்ணீர் வடிக்கின்றார். 


மேலும் கயலின் தவிப்பைப் பார்த்த எழில் அவளுக்கு இன்னமும் தன் மேல் லவ் இருக்கு என்பதனை உணர்ந்து புன்முறுவல் பூக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement