• Jul 25 2025

காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன், அந்த வீடியோவை அழியுங்க- டி. இமானிடம் போன் பண்ணி கெஞ்சிய சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான்  சிவகார்த்திகேயன் நடித்த மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

இருப்பினும் கடந்த சில காலமாகவே சிவகார்த்திகேயன் படத்துக்கு இமான் இசையமைக்கவில்லை. அதனை கவனித்த ரசிகர்கள் இந்தக் கூட்டணிக்கு என்னதான் ஆச்சு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இதனால் டி. இமான் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது,சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது.


 அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இந்த நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோகினா சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர், அவர் பாவம். நாங்கள் பிரிய கூடாது என நினைத்தார், எந்த ஒரு நண்பனும் பிரியகூடாது என்று தான் நினைப்பார்.இமானுக்கு விவாகரத்து விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை, எனவே தான் அவர் சிவகார்த்திகேயன் மீது இப்படிபட்ட குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்று கூறியிருந்தார்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த விஷயம் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருவதால் நேற்று இரவு சிவகார்த்திகேயன் டி இமானுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டதாகவும்இ தயவு செய்து அந்த வீடியோவை வெளியிட்ட யூடியூப் சேனலிடம் சொல்லி அந்த வீடியோவை அழிக்கவும் சொல்லியிருக்கின்றார்.

அத்தோடு எங்க வரனும் என்று சொல்லுங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.அதற்கு டி. இமான் அதெல்லாம் முடியாது என்றும் கூறியுள்ளதாக தற்பொழுது பிரபல செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement