• Jul 24 2025

ஆஸ்கர் மேடையில் கண்கலங்கிய பிரபல நடிகர்...ஏன் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பிரண்டன் பிரேசர்  தட்டிச்சென்றுள்ளார் .இதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  இன்று இடம்பெற்றது. 

இந்த விருது வழங்கும் விழாவில்   All Quiet on the Western Front, Everything Everywhere All at Once, The Whale, அவதார் -2 , பிளாக் பேந்தர் வுகாண்டா ஃபார் எவர், ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

 அத்தோடு இதில் தி வேல் (The Whale) படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரண்டன் பிரேசருக்கு கிடைத்தது. 

அதாவது இவர் அதிக பருமன் ஆனதால்  பல கேலி கிண்டலுக்கு ஆளாகி தற்போது இந்த விருதை பெற்றுள்ளார்.இந்த படத்தில் அதிக எடைக் கொண்ட சார்லியின் பாத்திரத்தை பிரேசர் ஏற்று நடித்தார்.  தனது இளம் வயது மகளுடனான உறவை மீட்டெடுக்க முயற்சிக்கும் ஆங்கில ஆசிரியராக வரும் பிரேசர் சோகம், வலி ​​மற்றும் உயிருக்கு ஆபத்தான உடல் பருமன் ஆகியவற்றுடன் வாழும் ஒரு கதாபாத்திரத்தில் தன் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருந்தார்.

 அத்தோடு விருதை பெற்றவுடன் பிரேசன் கண்கலங்கினார். இந்த வெற்றியின் மூலம் தனது கேரியர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement