• Jul 25 2025

மாரடைப்பால் பிரபல நடிகர் மரணம்..! 'ஆன்மா சாந்தியடையட்டும்'..நடிகர் சிரஞ்சீவி இரங்கல் !!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

2002-ம் ஆண்டு வெளியான ஒகடோ நம்பர் குர்ராடு தெலுங்கு படத்தின் மூலம்  பிரபலமானார் நடிகர் நந்தமூரி தாரகா ரத்னா. இதைத் தொடர்ந்து பத்ரி ராமுடு, தாரக், மனமந்தா மற்றும் ராஜா செய் வேஸ்தே உள்ளிட்ட படங்களிலும் நடிகராக தாரக் நடித்தார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் என்டி ராமராவ் பேரனான இவர் ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டபோது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது., இதனைத் தொடர்ந்து மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட இவர் பின்னர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவரது மறைவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “நந்தமூரி தாரக ரத்னாவின் அகால மரணம் வருத்தத்தையும் சோகத்தையும் அளிக்கிறது. அவ்வளவு திறமையான, பாசமுள்ள இளைஞர்.. சீக்கிரம் போய்விட்டார்!

அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்! 🙏” என நடிகர் சிரஞ்சீவி உருக்கமாக பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement