• Jul 25 2025

பிரபல நடிகர் உடல்நலக் குறைவால் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயந்த் சாவர்க்கர். இவர் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தினுடைய இந்தி ரீமேக்கிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அத்தோடு மராத்தி மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


87 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவஸ்தை பட்டு வந்துள்ளார். அதாவது வயது முதிர்வு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இவருக்கு இருந்துள்ளன.


இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நடிகர் ஜெயந்த் சாவர்க்கர் காலமானார். இவரின் உயிரிழப்பானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவிற்கு ரசிகர்கள், மற்றும் திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது இரங்கலினைத் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement