• Jul 24 2025

4மாதங்களாக காணாமல் போன பிரபல நடிகர்... மரப்பெட்டியில் இருந்து உயிரற்ற நிலையில் மீட்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பிரேசில் நடிகரான ஜெபர்சன் மச்சாடோ பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் பிரேசில் தலைநகர் ரியோ டிஜெனிரோ பகுதியில் குடும்பத்துடன் இணைந்து வசித்து வந்தார். 


ஆனால் கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி முதல் ஜெபர்சன் மச்சாடோவை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிரமாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


மேலும் சமீபத்தில் ஜெபர்சன் மச்சாடோ செல்போனில் இருந்து ஒரு சில குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அதில் எழுத்துப்பிழைகள் அதிகம் இருப்பதால் எனது மகன் அனுப்பியது இல்லை என்றும் அவரது தாய் மரியா தாஸ் போலீசில் மீண்டும் புகார் மூலம் தெரிவித்தார். 

இந்த நிலையில் 4 மாதங்களாக காணாமல் போன இந்த நடிகரை தற்போது போலீசார் பிணமாக மீட்டு உள்ளனர். அந்தவகையில் நடிகர் ஜெபர்சன் மச்சாடோவுக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு மரத்தடியின் கீழ் 6.5 அடி ஆழத்தில் ஒரு மரப்பெட்டிக்குள் உடலை வைத்து சங்கிலியால் பிணைத்து இருந்ததாக கூறப்படுகிறது. 


எனவே அதே தோட்டத்தில் வாடகைக்கு குடியிருந்தவர் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் ஆனது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement