• Jul 25 2025

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த பிரபல நடிகர்கள்- யார் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில், கிளாஸ் ஆன படங்களை தேர்வு செய்து, படு மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தளபதி விஜய். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் இவர்,  எது செய்தாலும் அது அவருடைய ரசிகர்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுவதும்... பேசப்படுவதும்.. வழக்கம் தான்.


இந்நிலையில் இன்றைய தினம் விஜய் திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அவர் இணைந்தது தெரிந்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களையும் அவரது பாலோயராக இணைத்து வருகின்றனர்.5 மணி நேரத்தில் 24 லட்சம் பாலோவர்ஸ் இவரைப் பின்பற்றி வருகின்றனர். அத்தோடு விஜய்யின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லியோ படத்தின் ஷுட்டிங்கின் போது காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருவதையும் காணலாம்.


இந்த நிலையில் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்ததற்காக சிம்பு ,அருண் விஜய் எனப் பல பிரபலங்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement