• Jul 25 2025

கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை- பரபரப்பில் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாண்டே.தன்னுடைய சமூக வலைதளத்தில் தன் நடத்தி வந்த போட்டோஷூட் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர், இவர் 2012 இல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 5 ஐ வென்ற பிறகு அவர் கொஞ்சம் கூட ஆடை அணியாமல் போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

இவர் சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்த கொண்டார்.இந்த நிலையில் இவருக்கும் இவருடைய கணவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தலை, கண் மற்றும் முகத்தில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.


இந்த சம்பவத்தை அடுத்து , நடிகை பூனம் பாண்டேயின் கணவர் சாம் பாம்பே மும்பையில் நேற்று கை து செய்யப்பட்டார். பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என மும்பை போலீசார் தெரிவித்தனர்.ஆனால் நடிகைக்கு இவ்வாறு ஏற்பட்டதற்கான காரணம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

அத்தோடு சாம் பாம்பே பாலிவூட் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார்.இவர் தன் காதல் மனைவியை இப்படி செய்திருக்கும் செயல் தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டு வருகிறது. 










Advertisement

Advertisement