• Jul 23 2025

AK 61 படப்பிடிப்பில் பிரபல நடிகை; வெளியானது புகைப்படம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் மூன்றாவது முறையாக எச். வினோத்துடன் இணையும் திரைப்படம் தான் AK61.

இப்படத்தினை போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது.

AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்தது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் கூறியதன்படி தற்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

மேலும் அங்கு ரசிகருடன் மஞ்சு வாரியர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement