• Jul 25 2025

சம்யுக்தா விவாகரத்தில் சிக்கிய நடிகர் ரவிக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல நடிகை- இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!


கடந்த மார்ச் மாதம், சீரியல் பிரபலமான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஈரோட்டில் விஷ்ணு காந்த் குடும்ப முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், பெரிதாக பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக சம்யுக்தா தரப்பில் இருந்து 25 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக அவரே தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக கோவிலில் நடந்த நிலையில், பின்னர் விஷ்ணுகாந்த் வீட்டிற்கு அருகே உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் வரவேற்பு நடைபெற்றதாகவும் சம்யுக்தா கூறி இருந்தார். மேலும் திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், பின்னர் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.


சம்யுக்தாவும் - வி ஜே.ரவியும் நிறைமாத நிலவே என்கிற வெப் சீரிஸில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அப்போது தான் இவர்கள் இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து வி.ஜே .ரவி... சம்யுக்தா தவறாக நடந்து கொண்டதாக கூறியதற்கு நான் அப்படி பட்ட குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இவருடன் 'காதலே காதலே' வெப் சீரிஸில் இணைந்து நடித்து வரும் சக நடிகையான வெண்பா, ரவியின் இஸ்டாக்ராம் போஸ்ட்டை ஷேர் #westandwithravi என்கிற ஹேஷ்டேக் போட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவும்... விஷ்ணுகாந்த் ஷேர் செய்துள்ள ஆடியோவும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement