• Jul 25 2025

பிரபல பாலிவூட் இயக்குநர் திடீர் மரணம்- நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னணி நடிகைகள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல பாலிவூட் இயக்குநர் பிரதீப் சர்க்கார் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த 2021ல் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானதில் இருந்து அவரது உடல்நிலை நலிவுற்று இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.


இவரது மறைவுக்கு பாலிவூட் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்..பாலிவூட் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, வித்யா பாலன், ராணி முகர்ஜி ஆகியோர் நேரில் சென்று இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். 2005இல் பரிணீதா என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குநராக மாறினார்.

 இந்த படத்தில்தான் இவர் முதன்முதலாக நடிகை வித்யா பாலனை பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.அதன் பிறகு ராணி முகர்ஜி நடித்த மர்தானி என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி பெற்று தற்போது மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்கள் தவிர வெப் சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்திய இவர் 4 வெப் சீரிஸ்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement