• Jul 26 2025

திருமணத் தேதியை குஷியாக அறிவித்த KGF திரைப்பட பிரபல நடிகர்- அதுவும் கல்யாணம் எங்கே தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

2007 ஆம் ஆண்டு துளு திரைப்படமான பாடி மூலம் தனது சினிமா கெரியரை ஆரம்பித்தவர் தான் நடிகை ஹரி பிரியா. இவர் தொடர்ந்து தமிழில் கனகவேல் காக்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார்.அதன் பின்னர் முரண், வல்லக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிக்குமார் நடித்த 'நான் மிருகமாய் மாற' திரைப்படத்தில் நடித்திருந்தார். 


இது தவிர கன்னடத்தில் பெல் பாட்டோம், உக்ரம், ரிக்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இது தவிர முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். நடிகை ஹரிப்பிரியா, பிரபல KGF நடிகர் வசிஷ்ட சிம்ஹாவை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார்.


நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹரிப்பிரியா & வசிஷ்ட சிம்ஹா வெளியிட்டுள்ளனர்.இருவரும் காதலிப்பதாக ஹரி பிரியா ஏற்கனவே தனது சமூக வலைதளத்தில் வசிஷ்ட சிம்ஹாவுடன் இருக்கும் புகைப்படத்தை   பகிர்ந்துள்ளார்.


இந்நிலையில் வரும் ஜனவரி 26-ம் தேதி மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் வசிஷ்ட சிம்ஹா மற்றும் ஹரிப்ரியா திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேதியை எம்பி பிரதாப் சிம்ஹா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.மைசூரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்திற்கு சென்ற வசிஷ்ட சிம்ஹா மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் ஆசி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement