• Jul 24 2025

ஏகே 62 திரைப்படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்-அச்சச்சோ பயங்கரமானவராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ந் தேதி வெளியானது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், மஞ்சு வாரியர்,சமுத்திரக்கனி, ஜான் கொக்கைன்,அமீர், பாவ்னி ஆகியோர் நடித்திருந்தனர்.

 இப்படம் வெளியாகி 28 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனும் இதனை உறுதி செய்திருந்தார்.


ஏகே 62 என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.ஆனால், Ak 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், விக்னேஷ் சிவன் தயார் செய்து வைத்திருந்த கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிடிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மகிழ்திருமேனியுடன் கை கோர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.


 இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் ஏன்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது.


Advertisement

Advertisement