• Jul 25 2025

படிக்கட்டில் தவறி விழுந்து பிரபல பாடகர் படுகாயம்... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகர்களில் ஒருவர் ஜூபின் நௌடியால். அந்தவகையில் Tu Saamne Aaye, Manike,Bana Sharabi உள்ளிட்ட அவரது சமீபத்திய பாடல்கள் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.


அதாவது கடந்த வாரம் தான் அவர் துபாயில் பெரிய கான்செர்ட் ஒன்றினை நடத்தி இருந்தார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருந்தது. அதுமட்டுமல்லாது அடுத்து வரும் பண்டிகை கால சீசனுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் எனவும் அவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். 

இந்த நிலையில் தான் அவர் தற்போது விபத்தில் சிக்கி இருக்கிறார். நேற்று காலை இந்த விபத்து நடைபெற்று இருக்கிறது. அதில் அவருக்கு முழங்கை உடைந்து, விலா எலும்பில் விரிசல் வந்திருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், ஒரு கையை சில காலத்திற்கு அவரால் பயன்படுத்தமுடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு சரியாகும் வரை அவரை கையை அசைக்கக்கூடாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்களாம். இந்த சம்பவமானது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

Advertisement

Advertisement