• Jul 24 2025

வீட்டு குளியல் தொட்டியில் இறந்து கிடந்த பிரபல பாடகர்-அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கலிபோர்னியாவில் இருக்கும் தன் வீட்டுக் குளியல் தொட்டியில் இளம் பாடகரான ஆரன் கார்டர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 அமெரிக்காவை சேர்ந்தவர் ஆரன் கார்டர். 34 வயதான அவர் பிரபல பாடகர் ஆவார். "Aaron's Party (Come Get It)" ஆல்பம் மூலம் பிரபலமானவர்.

மேலும் அவர் கலிபோர்னியாவில் இருக்கும் லங்காஸ்டர் பகுதியில் வசித்து வந்தார். இவ்வாறுஇருக்கையில்  சனிக்கிழமை காலை 10.58 மணிக்கு தன் வீட்டுக் குளியல் தொட்டியில் கார்டர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ப்ளோரிடாவில் இருக்கும் தம்பா பகுதியில் 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி பிறந்தார் ஆரன் கார்டர். 7 வயதில் இருந்து பாட்டு பாடி வருகின்றார். தன் 9வது வயதில் முதல் ஆல்பத்தை வெளியிட்டார் கார்டர்.



மேலும்  அவரின் அண்ணன் நிக் கார்டர் தி பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் இசைக்குழுவை சேர்ந்தவர். அந்த குழுவுடன் சேர்ந்தும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் ஆரன் கார்டர்.

பிரபலமான பின்னர்  அவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தான் கைது செய்யப்பட்டது குறித்து 2017ம் ஆண்டு வெளிப்படையாக பேசினார் ஆரன். அவர் எலும்பும் தோலுமாக இருந்ததை பார்த்தவர்கள் ஆரன் கார்டருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது இல்லை என்றால் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்துகிறார் என்று பேசினார்கள்.

இவ்வாறுஇருக்கையில் கார்டர் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது இசை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Advertisement

Advertisement