• Jul 25 2025

சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டப்படும் பிரபல தமிழ் நடிகை.. கண்டுக்காத நட்சத்திரங்கள்.. ஓடி வந்து கை கொடுத்த தெலுங்கு நடிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் எல்லோரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு சிலர் கோடி கோடியாக சம்பாதிக்கும் அதேநேரம், மேலும் சிலர் வறுமையில் வாடி வருகின்றார்கள். இதேபோன்று ஆரம்பத்தில் சினிமாவில் பாபுலராக இருந்து தற்போது வறுமையில் வாடுகின்ற ஒருவர் தான் நடிகை வாசுகி. 


அந்தவகையில் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் 150இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் தற்போது சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றார். இதனை அவர் யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

வாசுகி தன் கஷ்டத்திற்கு கை கொடுக்குமாறு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரிடம் உதவி கேட்டும் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் இவரின் பரிதாப நிலை குறித்து அறிந்தவுடன் தெலுங்கு நடிகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 


அந்தவகையில் மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் நாகபாபு ஆகியோர் தலா ஒரு லட்சம் ரூபாய் அளித்து அவருக்கு உதவி இருக்கிறார்கள். அத்தோடு நடிகர் மஞ்சு விஷ்ணுவும் வாசுகிக்கு உதவ முன்வந்துள்ளார். 

அதாவது மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் தலைவராக இருக்கும் மஞ்சு விஷ்ணு, தனது சொந்த செலவில் மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் கார்டு ஒன்றினை வழங்கி உள்ளார். இதன்மூலம் வாசுகிக்கு பண உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.


இந்த தகவலை நடிகை கராத்தே கல்யாணி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மஞ்சு விஷ்ணுவின் இந்த நல்ல மனசிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதேபோன்று வாசுகியிடம் போனில் பேசியுள்ள நாகபாபு, தற்போது தான் அமெரிக்காவில் இருப்பதாகவும், இந்தியாவிற்கு வந்ததும் மேற்கொண்டு உதவிகள் செய்து தருவதாகவும் உறுதியளித்திருக்கிறாராம். 

இவ்வாறு பணமின்றி தவித்து வரும் தமிழ் நடிகைக்கு ஆதரவு அளித்த டோலிவுட் நடிகர்களின் நல்ல உள்ளத்தை பாராட்டி வரும் நெட்டிசன்கள், மறுபுறம் அவருக்கு உதவ முன்வராத தமிழ் நடிகர்களை கமெண்டுகளின் வாயிலாக விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement