• Jul 24 2025

ட்விட்டரில் ஷாருக்கானை டேக் செய்து ட்வீட் போட்ட ரசிகை - ஷாருக்கான் கொடுத்த தரமான பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் செல்ல தம்பியான அட்லி தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார். முதன்முறையாக பாலிவுட் சென்ற அட்லி, இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்குகிறார். ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

பான் இந்தியா படமாக உருவாகும் ஜவான், தமிழ் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளாராம். அதேபோல், இந்தப் படத்தின் கதை தமிழில் ஹிட் அடித்த ஒரு படத்தின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 


மேலும், ஜூன் 2ல் வெளியாகவிருந்த ஜவான் படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. அதன்படி, இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதற்குள் எடிட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷனை முடிக்க அட்லி தீயாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் பெண் ஒருவர் நான் கர்ப்பிணியாக உள்ளேன்.எனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளன.என்னை வாழ்த்துக்கள். எனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு பதான், ஜவான் என்று பெயர் வைக்க உள்ளேன் என்று ஷாருக்கானுக்கு டுவிட் போட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ஷாருக்கான் வாழ்த்துக்கள் ஆனால் இதை விட நல்ல பெயரை வையுங்கள் என ரிப்ளை செய்துள்ளார்.இவரின் இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement