• Jul 26 2025

குட்டி வயிறு தெரிய கணவருடன் முக்கிய நிகழ்ச்சிக்கு வந்த ஆல்யா பட்- கியூட் ஜோடியை பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிறகு முதல் முறையாக இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

அதில் ஆலியா முழு கைகளுடன் பழுப்பு நிற உடையில் தனது அழகான குட்டி வயிறுடன் காணப்பட்டார்.மேலும், ஆலியா பட்டின் முகத்தில் முன்பை விட பளபளப்பு அதிகமாகவே இருந்தது.

மேலும், ரன்பீர் கபூர் கருப்பு டி-ஷர்ட்டை மற்றும் கருப்பு பேண்டுடன் விழாவிற்கு வந்திருந்தார். இருவரும் கைகளை கோர்த்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இணையத்தில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, சமூக வலைத்தளத்தில் இந்த கியூட் ஜோடியை புகழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement