• Jul 26 2025

தமிழ் படத்தில் நடிக்க விரும்பும் பிரபல கன்னட நடிகர்.. வாய்ப்பு கிடைக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் உபேந்திரா தற்போது 'கப்ஜா' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இதில் இவருடன் இணைந்து சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா எனப் பலரும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை சந்துரு டைரக்டு செய்துள்ளார். 


'கப்ஜா'படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக படக்குழுவினர் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் உபேந்திரா கூறும்போது, "விரைவில் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கப்ஜா படம் இயக்குநர் சந்துருவின் நான்கு வருட கனவு. படத்தின் டிரெய்லரில் அவரின் உழைப்பு தெரிகிறது. இந்த படம் தமிழகமெங்கும் வெளியாக இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.


மேலும் இப்படம் குறித்து ஸ்ரேயா கூறும்போது, "சென்னை எப்போதும் எனக்கு ஸ்பெஷலாக இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். உபேந்திரா போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி'' என உணர்ச்சி பொங்க தெரிவித்திருந்தார்


எது எவ்வாறாயினும் தமிழ் படங்களில் நேரடியாக நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என சந்துரு கூறிய விடயமானது தமிழ் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

Advertisement

Advertisement