• Jul 25 2025

ஜவான் படத்திற்காக தமிழில் பாடிய ஷாருக்கான்... அவரே சொன்ன குட் நியூஸ்... உற்சாகத்தில் ரசிகர்கள்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'ஜவான்'. இப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உட்பட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். 


அத்தோடு இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும் ரெட் சில்லிஸ் தயாரிக்கும் இந்தப்படம் ஆனது செப். 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபகாலமாக ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்து வருகின்றார்.


இந்நிலையில் தற்போது ஜவான் படம் பற்றி ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதிலளிக்கையில் "ஜவான் ஒரு புது வகை படைப்பு. இயக்குநர் அட்லீ, மாறுபட்ட 2 ஷாருக்கானை உருவாக்கும் தீவிரமான ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்தப் படத்தைப் பொருத்தவரை, அட்லீ மற்றும் அவர் குழுவினர்தான் மாஸ். அவர்களின் ஸ்டைல், அணுகுமுறை என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது" என்றார்.


அதுமட்டுமல்லாது "இதில் நடித்திருக்கும் நயன்தாரா அழகானவர். இனிமையானவர். அவருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அதேபோன்று விஜய் சேதுபதி அடக்கமான மனிதர். ஒரு சிறந்த நடிகர். அவரிடமிருந்து நான் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். அட்லீயும், அனிருத்தும் இணைந்து, என்னைத் தமிழில் சில பாடல் வரிகளைப் பாட வைத்துள்ளனர். சரியாக உச்சரித்திருக்கிறேன் என நம்புகிறேன்" எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement