• Jul 26 2025

பிரபல நடிகர் அதிரடியாக கைது.. காரணம் இதுதானா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சேத்தன் குமார் அகிம்சா. இவர் நேற்றைய தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றார். 

அந்த பதிவில் அவர் கூறுகையில் 'இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது' என விமர்சிக்கும் வகையில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அப்பதிவில் "இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டு உள்ளது. ராவணனை வீழ்த்தி ராமன் அயோத்தியா திரும்பியதில் இருந்து இந்திய நாடு என்பது தொடங்குகிறது என்ற சாவர்க்கரின் கருத்து ஒரு பொய்" என்றார்.


அதுமட்டுமல்லாது "1992: பாபர் மசூதியே ராமரின் பிறப்பிடம் என கூறியது ஒரு பொய். 2023: உரிகவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகியோரே திப்புவை கொன்றவர்கள் என்றதும் ஒரு பொய்" என அவர் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அதில் கடைசியாக, இந்துத்துவாவை உண்மையால் வீழ்த்த முடியும். சமத்துவம் என்பதே உண்மை" எனப் பதிவிட்டு உள்ளார். 


இவ்வாறு சர்ச்சையாக பதிவிட்டதற்கு எதிராக பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் ஒன்றினை அளித்து உள்ளார். இந்நிலையில் இந்தப் புகாரின் பேரில் தற்போது கன்னட நடிகர் சேத்தன் குமாரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த விடயமானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement