• Jul 25 2025

சம்பள விஷயத்தில் ஏற்பட்ட விரக்தி... திடீரென சினிமாவை விட்டு விலகிய பிரபல நடிகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ரஜத் பேடி. தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர் சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இதற்கான காரணங்கள் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ரஜத் பேடி கூறி இருக்கின்றார். 


அந்தவகையில் அவர் கூறுகையில் "ஹிருத்திக் ரோஷனின் கோயி மில் கயா இந்தி படத்தில் நான் வில்லனாக நடித்து இருந்தேன். எனது கதாபாத்திரம் கதாநாயகன் மற்றும் நாயகிக்கு இணையாக அப்படத்தில் இருந்தது. இந்த படத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு நான் நடித்து இருந்தேன். ஆனால் படம் முடிவடைந்த பிறகு எடிட்டிங்கில் நான் நடித்த அனைத்து காட்சிகளையும் அவர்கள் நீக்கி விட்டனர். 

இது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு சம்பளத்தை காசோலையாக கொடுத்தனர். வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் அது திரும்பி வந்தது. இதற்காக கோர்ட்டுக்கு சென்று போராடுவது தேவையா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்" என்றார்.


மேலும் "எனது நண்பர்கள் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடக்கும் பெரிய கம்பெனிகளை நடத்துகிறார்கள். நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன்? என்று எனக்கு அந்த சமயத்தில் தோன்றியது. சம்பாத்தியம் முக்கியம் என்றும் நினைத்தேன். அதனால் சினிமாவை விட்டு விலகி விட்டேன்'' என பல விடயங்களை வெளிப்படையாக கூறி உள்ளார்.

எது எவ்வாறாயினும் நடிகர் ரஜத் பேடி திடீரென சினிமாவை விட்டு விலகியுள்ளமை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement