• Jul 25 2025

இந்தவாரம் வெளியேறியது ஆயிஷா இல்லையாம்.. அப்போ இவரா.. திடீரெனக் கசிந்த தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என போட்டியாளர்களிடையே சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.


அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் ஆடம்பரமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன், அஸீம், ஆயிஷா, மணிகண்டன், ரச்சிதா, ராம், ஏடிகே, அமுதவாணன், கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

இவர்களில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் அசீம், தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, ராபர்ட், ஆயிஷா, நிவாஸினி, ஆகிய ஏழு போட்டியாளர்களும் தெரிவாகி நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதில் நிவாஷினி, ஆயிஷா,ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய நால்வரும் ஆகக் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதுமட்டுமல்லாது இந்த நால்வரில் யார் வேண்டுமானாலும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததை மறந்துவிட்டு ரச்சித்தா பின் சுற்றி வருவதால், அவர் வெளியேறுவார் என்று பிக்பாஸ் ரசிகர்களால் கூறப்பட்டது.

ஆனாலும் ராபர்ட் மாஸ்டரை விட நிவாஷினி தான் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் நிவாஷினி விளையாட்டை சரியாக விளையாடாமல் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே அசல் கோலாருடன் சுற்றி தனது பெயரை தானே கெடுத்துக் கொண்டார். 


இருப்பினும் அசல் வெளியேறிய பின்பும் நிவா சிறப்பாக விளையாட வில்லை என்பதால் மக்கள் அவருக்கு வாக்கு அளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாராம்.


Advertisement

Advertisement