• Jul 24 2025

'எதிர்நீச்சல்' ஆதிரையின் நிஜ கணவர் இவர்தானா..? வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலிற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. இதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றன. 

அந்தவகையில் இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆதிரையாக நடித்து வருகிறார் சத்தியா தேவராஜன். இவர் மாடலிங் துறையில் நுழைந்து பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார்.


இதனையடுத்து பின்னர் அருவி சீரியலில் நடிக்க தொடங்கினார். அதுமட்டுமல்லாது தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தும் இருக்கின்றார்.

இந்நிலையில் இவரின் சொந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், நிஜ வாழ்க்கையில் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதாவது இவருடைய கணவரும் ஒரு பிரபலம் தானாம். திருமணத்திற்கு பிறகும் சத்தியாவின் கணவர் நடிப்புக்கு தடை போடாததால் தற்போது அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் சுதந்திரமாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் சத்தியாவின் கணவரும் ஒரு பிரபலம் தான் என்ற செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். இதோ அவரின் புகைப்படம்..! 


Advertisement

Advertisement