• Jul 23 2025

மனைவியை விவாகரத்து செய்யப்போகும் விஜய்-வெளியான ட்விட்டர் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்து  வருகிறார்.

இதற்கிடையில் விஜய் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வதந்திகள் இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி வருகிறது என்று தான் கூற வேண்டும்.

அந்தவகையில் நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யவுள்ளதாக வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்தே பேசப்பட்டு வருகின்றது.



அத்தோடு, பிரபல நடிகையையும் விரைவில் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவலும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறுஇருக்கையில் பிரபல பாலிவுட் சினிமா விமர்சகர் உமைர் சந்து என்பவர் சமீபகாலமாக தென்னிந்திய நட்சத்திரங்களில் தனிப்பட்ட விசயங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறார்.



தற்போது சூப்பர் ஸ்டார் விஜய், மனைவியை விவாகரத்து செய்யவுள்ளார் என பிரேக்கிங் நியூஸ் என்று கூறி டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உமைர் சந்துவை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement