• Jul 26 2025

திடீரென விஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய சன் பிக்சர்ஸ்..போஸ்டர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியரும் ஆவார்.


இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.


இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.விஜய் சேதுபதி விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் பிறந்தார். மேலும் இவர் இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 


இந்நிலையில் ர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘டிஎஸ்பி’ திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்கிற நடிகை நடித்துள்ளார்.


இந்நிலையில் "டிஎஸ்பி" என பெயரிடப்பட்டு போலீஸ் உடையில் விஜய் சேதுபதி மாஸாக பைக்கில் இருக்கும் புகைப்பட போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டனர். இந்த போஸ்டர் பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 


அதாவது இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதாக தான் இதற்கு முன்னர் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் ஒரு இடத்தில் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை. 


அதற்கு பதில் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் இப்படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியேறியது உறுதியாகி உள்ளது. 

Advertisement

Advertisement