• Jul 23 2025

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலுவிடம் இத்தனை கோடி சொத்து இருக்கா...வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடிக்கு என்று ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளனர். மேலும் அவரது காமெடி காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் இப்போதும் உலா வருகிறது. 


சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். அதிலும் வடிவேலுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. 


இந்நிலையில் தற்போது வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் வடிவேலுவிற்கு சென்னையில் மட்டும் 2கோடி மதிப்புள்ள  இரண்டு வீடு உள்ளது. அதுமட்டுமல்லாது இரண்டு ஆடி கார், பிஎம்டபிள்யூ, டொயோடோ என நான்கு சொகுசு கார்கள் உள்ளன.


அத்தோடு இவருக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் நிலமும் உள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது வடிவேலுவிடம் மொத்தாமாக ரூ. 130 கோடி சொத்து இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement