• Jul 25 2025

வெற்றிகரமாக முடிவடைந்த பிரபல ஹிட் சீரியல்... ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்தீர்கள்... கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பான ஒரு ஹிட் சீரியல் தான் 'ரஜினி'. இந்த சீரியலில் ரஜினி, பார்த்திபன், அரவிந்த், ராதிகா ஆகிய கதாபாத்திரங்கள் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.


அதிலும் குறிப்பாக இதில் வரும் ரஜினி கதாபாத்திரம் ஆனது ஒரு பெண் தனது குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களை ரொம்பவே அழகாக எடுத்துக் காட்டியிருந்தது. இந்த நேரத்தில் ரஜினி சீரியல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்வதாக ஷாக் ப்ரோமோ வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த சீரியலை முடிக்க வேணாம் என ரசிகர்கள் பலரும் கமெண்ட் பண்ணி இருந்தனர்.


இந்நிலையில் நேற்றைய தினம் இந்த சீரியல் வெற்றிகரமாக முடிவிற்கு வந்தது. அதாவது 440 எபிசோட்டுகளுடன் நேற்றைய தினம் நிறைவிற்கு வந்தது. இவ்வாறாக இந்த சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்திருந்தாலும், ஏன் இந்த சீரியலை இவ்வளவு சீக்கிரம் முடித்தீர்கள் என ரசிகர்கள் பலரும் கவலையுடன் உள்ளனர். 


Advertisement

Advertisement